8 Oct 2021

பித்தேறிய மிருகங்கள்

பித்தேறிய மிருகங்கள்

உடலுக்கு அலையும் மிருகங்கள்

தின்று துப்பியது போக

எஞ்சிய உடல் மீதம் இருக்கிறது

மீண்டும் பசியெடுக்கும் போது

மீதமிருக்கும் உடலுக்காகத் தேடி வரும் மிருகங்கள்

தின்று துப்பிப் போகின்றன

உயிரென்ற ஒன்று இருக்கும் வரையில்

மீதமிருக்கும் உடலைச் சுமக்கும் வாதை வருத்துகிறது

உயிர்ச்சுமை பிரிந்த நிம்மதியான பொழுதில்

செத்து விட்ட உடலை

புழுக்கள் தின்று தீர்க்கின்றன

மீதம் வைத்த உடலுக்காகத் தேடி வந்த

காமப் பித்தேறிய மிருகங்கள்

ஏமாந்து திரும்புகின்றன

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...