7 Oct 2021

பூட்டைத் துளைத்தெழும் நினைவுச் சாவிகள்

பூட்டைத் துளைத்தெழும் நினைவுச் சாவிகள்

திறந்து கிடக்கும் வீடுகள்

எந்த நினைவையும் எழுப்புதில்லை

பூட்டிக் கிடக்கும் வீடுகள்

உள்ளே யாரோ இருப்பது போன்ற

உணர்வை எழுப்பிக் கொண்டிருக்கின்றன

ஒரு பூட்டு திறக்கப்படாத சாவியின் நினைவைக்

கிளர்ந்தெழச் செய்து விடுகின்றது

பூட்டிய வீட்டிக்குள் யாருமில்லையென்ற நிரூபணம்

வழங்கப்பட்ட பின்னும்

நினைவுக்குள் ஒருவர் பூட்டிய வீட்டினுள்

ஒளிந்திருக்கிறார்

அவரைத் துரத்திப் பிடித்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறது மனது

பார்ப்பவர்கள் கேட்பவர்கள் ஒரு மாதிரியாய் நினைக்கிறார்கள்

அவர்களுக்கு என்ன

பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்று அறியாதவர்கள்

பூட்டியிருக்கும் வீட்டினுள் இருக்கும் மனிதரை

நான் பார்த்துக் கொள்கிறேன்

பேசிக் கொள்கிறேன்

பகிர்ந்து கொள்கிறேன்

அவர்களை முதலில் கண்ணில் படும் மனிதர்களிடம்

பேசச் சொல்லுங்கள்

எதையாவது பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...