15 Dec 2018

மனோவியல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி


மனோவியல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
            மனோவியல் பிரச்சனைக்கு மற்றுமொரு காரணம் தான் மதிக்கப்படவில்லை என்று நினைப்பதுதான். அது உண்மையும் கூட. தன் பேச்சை யாரும் மதிக்க மாட்டேன்கிறார்கள், எதிர்த்துப் பேசுகிறார்கள், அல்லது அதற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் மனோவியல் பிரச்சனையின் தொடக்கக்கட்டம்.
          மதிக்கப்படும் மனிதர்தான் மகிழ்ச்சியாக இருப்பார் என்பார்கள்.
          அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்து விடுவது இல்லை. இதுவும் மனிதர்களின் கவலைகளுக்கு எல்லாம் ஒரு முக்கியமான காரணம். இப்படியெல்லாம்தான் மனிதர்கள் இருப்பார்கள். காரணம் அதுதான் அவர்களின் இயல்பு. ஆகவே சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் விட்டு விடலாம்.
          உணர்ச்சிவசப்படுதல் மற்றுமொரு பிரச்சனைக்குக் காரணம். உணர்ச்சிவசப்படுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீர்வுக்கு வராது. ஆகவே உணர்ச்சவசப்படக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில் தெளிவு கொள்வது நல்லது.
          சில கவலைகளுக்கு, பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது காலத்தைத் தள்ளிப் போடுதல்தான். காலமாகக் கடந்து அந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டால் ஒழிய வேறு வழியில்லை. அதற்காக அநாவசியமாக கவலைப்பட்டு எந்த புண்ணியமுமில்லை.
          சில நேரங்களில் எதையும் கண்டு கொள்ளக் கூடாது. தன் போக்குக்கு தன்னால் முடிந்தது எதுவோ அதை செய்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் வாழ்க்கை.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...