3 Jul 2018

எந்த பெருமையும் உனக்கில்லை!


எந்த பெருமையும் உனக்கில்லை!
            குற்றங்கள் அதிகம்தான். அதைப் பார்த்தால் வாழ முடியுமா? அதற்காக குற்ற உணர்ச்சி தேவையோ இல்லையோ? அது தானாக மறந்து விடுகிறது. மறக்காவிட்டால் வாழ முடியுமோ?
            ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்தால் மீடியாவுக்கு நல்ல தீனி. மூன்று நாள்கள் வேட்டையாட்டி விடுவார்கள். பிறகு மறுபடியும் அப்படி ஒன்று நிகழ வேண்டுமே கவலைபட்டுக் கொண்டிருப்பார்கள்.
            குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான் பாவம். விசாரணை, வழக்கு, தீர்ப்பு என்று கடந்தாக வேண்டும். வேண்டாம் என்றாலும் விட மாட்டார்கள். ரணம் மேல் ரணம் பட்டுத்தான் முடித்தாக வேண்டும்.
            பெரும் பாதிப்பை எதிர்கொண்ட பின் நீதி வேண்டும் என்று போராட முடியாது. அதிலிருந்து விடுதலை வேண்டியிருக்கிறது. விடுபட வேண்டியிருக்கிறது. நம் அமைப்புகள் அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி மீண்டும் ரணகளத்தைத் துவக்காமல் இருக்க வேண்டும்.
            குற்றங்களைப் பார்க்கையில் ஆண்களுக்குக் குற்றங்கள் பொழுதுபோக்காக இருக்கிறது. ஆண்களின் பொழுதுபோக்கு பெண்களுக்கு வாதையாக இருக்கிறது.
            ஒரு பெண்ணை ஒரு வாக்கியத்தில் அடித்துச் சாய்த்து விட முடிகிறது, தப்பு பண்ணியிருந்தா பயப்படாம சொல்லுன்னு.
            ஆண்களை ஆறுதல்படுத்தப்படுகிறார்கள், எவன்தான் தப்பு பண்ணல விட்டுத் தள்ளுன்னு.
            இதை பெண்களுக்கு எதிரான ஆண்களின் குற்றங்கள் என்பதை விட மனிதர்களுக்கு எதிரான மனிதர்களின் குற்றங்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.
            எப்போதும் சட்ட ஒழுங்கையே நம்பிக் கொண்டிருப்பதற்கில்லை. மனமாற்றங்களுக்கு எதாவது செய்ய வேண்டியிருக்கிறது.
            இங்கு மனமாற்றம் என்பது போதை ஏற்றுவதாக இருக்கிறதே! முதலில் அதைத்தான் மாற்ற வேண்டும். குற்றங்கள் பலப்படுவதைத் தடுத்தாலே பாதிக் குற்றங்கள் குறைந்து விடும்.
            குற்றங்களுக்கான ஊக்குவிப்புச் சமூகத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்.
            குற்றங்களைத் தடுப்பவர்களாக இருப்பவர்களிடம் ஏதாவது பிராது சொல்ல முடிகிறதா? அதைத் தடுப்பதாகச் சொல்லி பணம் கேட்டு இன்னொரு குற்றத்தைச் செய்ய வைக்கிறார்கள்!
            பேசாமல் குற்றவாளிகளை மன்னிக்கும் மனப்பான்மையோடு நடமாடுபவர்களாக நாட்டில் வாழ்வதே நல்லது என நிர்பந்திக்கப்படுகிறோம்.
            ஏதோ குற்றங்களுக்கு மத்தியில் வாழ்ந்தோம் என்று பெருமைபடத்தான் முடியுமா? குற்றங்களுக்கு மத்தியில் வாழ வைத்தோம் என்று அதையும் அவர்கள்தான் தட்டிக் கொண்டு போகிறார்கள்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...