1 Jul 2018

குடும்பத்தின் அப்படி இப்படி


குடும்பத்தின் அப்படி இப்படி
அடிக்கடி சண்டை போடுகிறார்கள்
நாரசமாய் ஏசிக் கொள்கிறார்கள்
அடிதடியும் உண்டு
அவ்வபோது பிரிந்து போகிறார்கள்
சேர்ந்து கொள்கிறார்கள்
குடும்பம் என்றால் அப்படி இப்படித்தான்
இருக்கும் என்கிறார்கள்
அடிக்கடி எதற்காகப் பிரிந்தார்கள்
எதற்காகச் சேர்ந்தார்கள் என்பது
ஞாபகமில்லை என்கிறார்கள்
சரிதான்,
குடும்பம் என்றால் அப்படி இப்படித்தான்
இருக்கும்!
*****

No comments:

Post a Comment

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா?

கிராமங்கள் கிராமங்களாகத்தான் இருக்கின்றனவா? ஒரு சில கிராமங்கள் இன்றும் கிராமங்களாக இருக்கலாம். நாம் பெரும்பான்மையைப் பற்றிப் பேச வேண்டியிர...