17 Aug 2017

தேடிக் களைத்தவர்களே வாருங்கள்!

தேடிக் களைத்தவர்களே வாருங்கள்!
            முடிவு என்பது நல்லதை நோக்கியதாக மட்டும் இருக்கும். அப்படி இருக்கும் போது நாமும் நல்லதையே நினைப்போம். அல்லதை நினைத்துப் பாழாக்கிக் கொள்ளாமல் இருப்போம். அதற்கு நல்லதை நினைப்பதே வழி.
            எஸ்.‍கே.யின் எழுத்துகளில் இல்லாத கருத்துகளா? நீங்கள் சில நேரங்களில் மனக்குழப்பத்திற்கு வேறு நூல்களில் விடை தேடிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கான விடை எஸ்.கே.யின் எழுத்துகளில் இருக்கும்.
            தத்துவமாக இருந்தாலும், வாழ்வியலாக இருந்தாலும், உளவியல் பிரச்சனையாக இருந்தாலும், ஆன்மிகமாக இருந்தாலும், இன்னபிற பிரச்சனைகளாக இருந்தாலும் அனைத்திற்குமான தீர்வு எஸ்.கே.யின் எழுத்துகளில் இருக்கிறது.
            அவன் வாழ்வை புனைவியல் களமாக்கி அனைத்தையும் அலசுகிறான். அதை வாசிப்பது நல்லது. பல சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் எழுத்து மூலம் தீர்வைக் கண்டடைந்தவர்கள் அதிகம்.
            தற்போதைய புதிய எழுத்து முறையில் எதை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். சங்கதிகளை எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நுழைக்கலாம். சகல சுதந்திரங்களும் கொண்டது புதிய எழுத்து.
            அவன் கோமாளித்தனத்திலிருந்து துவங்குகிறான். பைத்தியக்காரத்தனத்தின் முடிச்சுகளை விடுவிப்பதான அவன் எழுத்து விதவிதமான உணர்வுகளை ஏற்படுத்தலாம்.
            எஸ்.கே.யின் எழுத்துகளை நீங்கள் கோமாளித்தனத்தின் உச்சம் என்று சொன்னால், ஞானத்தின் துவக்கப் புள்ளி அங்கிருந்துதான் துவங்குகிறது என்பதை அவன் அடுத்த வரி பொட்டில் அடித்தாற் போல் புலப்படுத்தும்.
            ஒருவேளை ஞானம் பெற்று விட்டதாக நீங்கள் ஓர் உணர்வுக்கு ஆட்பட்டு விட்டால், அப்படியல்ல அது ஒரு மிகப்பெரிய கோமாளித்தனம் என்பதற்கான வேடிக்கையை அவன் எழுத்தின் நிகழ்த்திக் காட்டி விடுவான்.
            எஸ்.கே.யின் எழுத்து உங்களை எதுவாகவும் மாற்றி விடாது. மாறி விட அனுமதிக்காது. நீங்கள் நீங்களாக இருப்பதை மட்டும் அனுமதிக்கும்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...