16 Mar 2017

தடை செய்யுங்கள் பார்ப்போம்


தடை செய்யுங்கள் பார்ப்போம்
            "தடை செய்யுங்கள் பார்ப்போம்" என்ற பெயரில் மொபைல் கேமாய் வெளிவந்தது ஜல்லிக்கட்டு.
*****
முறையீடு
            திருடு போனதை மீட்டுத் தர வேண்டி முறையிட, மறுநாள் காணாமல் போயிருந்தது மாரியம்மனின் உண்டியல்.
*****
கெடு
            "எட்டு நாள்ல திருடனவன் தானா வந்து கொடுக்கல ரத்தங் கக்கிக் சாவான்!" சொன்ன சாமியாடி சரியாக எட்டாவது நாள் ரத்தம் கக்கித்தான் செத்துப் போனார்.
*****

No comments:

Post a Comment