14 Feb 2017

வெடிச் சிரிப்பு


பெயர்
மனைவியின் நகைகளை அடகு வைக்க வந்தவனின் பெயர் கேட்டேன். "கோவலன்!" என்றான்.
*****
வெடிச் சிரிப்பு
"உயிரைக் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை!" புத்தகத்தில் அந்த வரியைப் படித்ததும் திடீரென வெடித்துச் சிரித்தான் தூக்கு தண்டனைக் கைதி ரங்கசாமி!
*****
சாபம்
"மறுபிறவியில் சேலைக் கடையில் வேலை பார்ப்பாயாக!" துச்சாதனைச் சபித்தாள் திரெளபதி!
*****

No comments:

Post a Comment