பேர் சொல்லும் பிள்ளைகள்!
முகநூல்,
எக்ஸில் எல்லாருக்கும் இரண்டு பெயர்கள்.
சிலருக்கு
மூன்று, நான்கு, ஐந்து பெயர்கள்.
உதாரணத்துக்குச்
சில,
ராசகோபாலன்
குமரிமுத்து
சுந்தரசோழன்
சமுத்திரபாண்டியன்
ரங்கசாமி
குப்பண்ணன்
ராம்குமார்
கோபால்சாமி
தமிழ்ச்செல்வன்
அலெக்ஸாண்டர்
பரந்தாமன்
பக்கிரிசாமி
இப்படி
ஒருவருக்கு இரண்டு, மூன்று என்று நான்கு பெயர்கள். நாங்கள் படித்த போது ஒரே வகுப்பறையில்
நான்கைந்து பேருக்கு ஒரே பெயர் இருக்கும். முருகன் என்றால் நான்கைந்து முருகன்கள் எழுந்து
நிற்பார்கள். கவிதா என்றாலும் நான்கைந்து கவிதாக்கள் எழுந்து நிற்பார்கள்.
அப்போதும்
இப்படித்தான் கோவிந்தசாமி மகன் முருகன் இங்கே வாடா, கலியராசு மகன் முருகன் அங்கே போடா,
மாரிமுத்து மகன் முருகன் என்னடா பண்ணிக் கொண்டிருக்கிறாய், தெட்சணாமூர்த்தி மகன் முருகன்
வீட்டுப்பாடம் முடித்து விட்டாயாடா, சோனாச்சலம் பொண்ணு கவிதா வாயில் என்ன வைத்திருக்கிறாய்,
கிருபாகரன் மகள் கவிதா நேற்று ஏன் வரவில்லை, பாலகணபதி மகள் கவிதா ஏன் இப்படி முழிக்கிறாய்,
வெங்கடேசன் மகள் கவிதா என்ன ஆச்சு உனக்கு என்று அப்பா பெயரை வைத்துதான் பிரித்து அடையாளம்
கண்டு கேள்வி கேட்பார்கள் ஆசிரியர்கள்.
அதைத்தான்
இந்த முகநூல் தலைமுறையும் பின்பற்றுகிறது.
என்ன
ஒரு வித்தியாசம் என்றால் முன்பு அப்பா பெயரைச் சொல்லி பிள்ளைகள் பெயரைச் சொல்வார்கள்.
இந்த முகநூலில் தங்கள் பெயருக்குப் பின்பு அப்பா பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள்.
அதிலும்
இரண்டு பெயர்கள் ஒன்றாக அமைந்து விடும் போது, உதாரணத்துக்கு அப்புசாமி குழந்தைவேலு
என்ற பெயர் இரண்டு பேருக்கு அமைந்து விடும் போது வேறு வழியில்லை, மூன்றாவது பெயரையும்
இணைக்கத்தான் வேண்டியிருக்கிறது. அப்படித்தான் அப்புசாமி குழந்தைவேலு பாண்டிமுத்து
என்ற பெயரைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்தக்
குழப்பமெல்லாம் எதற்கு என்று பிள்ளைகள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள் பாருங்கள்.
வைத்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் போது கூட காது கேட்காமல் உட்கார்ந்திருக்கும்
பிள்ளைகள் பட்டப்பெயரைச் சொன்னதும் சட்டென்று எழுந்து விடுவார்கள். கருவண்டு முருகன்
என்ற சொன்னால் போதும் சட்டென்று என்னடா என்று கேட்பான் பாருங்கள், தயிர்சோறு கவிதா
என்றால் பல்லை உடைத்து விடுவேன் என்று சட்டென்று வரும் பதில் வரும் பாருங்கள், அது
செம ரகளையாக இருக்கும்.
*****
No comments:
Post a Comment