அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்!
அன்புக்காகத்
துயருறுவதும் அன்பே
துயருறுவதைப்
பார்க்க ஏலாது
யாருக்குப்
பிடிக்கும் துயருற
துயரைச்
சகித்தாலும் துயருறுவதைக் காணலும்
எவர்தான்
விரும்புவார்
அன்பு
கொண்டவர்களுக்கே தெரியும்
அன்புக்காகத்
துயருறுவதும் அன்பே
அன்பைப்
புரிந்து கொள்வது அசாத்தியம்
*****
சமரசத்திற்கான சிறு குறிப்பு
நீ அடுத்ததற்கு
நகர்ந்தால்
அவர்களும்
அடுத்ததற்கு நகர்வார்கள்
பயந்தால்
அங்கேயே நிற்பாய்
அவர்களும்
அங்கேயே நின்று
உனக்கெதிராகக்
குற்றப் பத்திரிகை வாசிப்பார்கள்
அங்கிருந்து
ஒரு தாவலைச் செய்
குற்றப்பத்திரிகையை
வீசி விட்டு
சமரசத்திற்குக்
கொஞ்சம் இறங்கி வருவார்கள்
*****
No comments:
Post a Comment