9 Jul 2022

சௌக்கிய மண்ணாங்கட்டி

சௌக்கிய மண்ணாங்கட்டி

சௌக்கியமா

டாக்டரைக் கேட்க வேண்டும்

என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்

அவர்தான் சொல்ல வேண்டும்

சீக்கிரம் பாருங்கள்

பணமிருந்தால் பார்க்க மாட்டேனா

அடடா அப்படியா சேதி

இப்போதெல்லாம் நாமாக என்ன சொல்ல முடிகிறது

வாஸ்தவம்தான்

உங்கள் கேள்விக்கு பதிலொன்றும் சொல்ல முடியவில்லை பாருங்கள்

அதனாலென்ன சௌக்கியத்திற்கு ஒன்றும் குறைச்சல் இருக்காது

டாக்டரைப் பார்க்க வேண்டாமா

அவரே சௌக்கியம் இல்லாமல்தான் இருக்கிறார்

இதென்ன புதிதாக இருக்கிறது

காசு கொடுத்துத் தெரிந்தென்ன போகிறது

காசில்லாதவர்கள் சௌக்கியமாகத்தான் இருந்தாக வேண்டும்

நூறாயுசு நன்றாக இருப்பீர்கள்

ஓ அப்படியா சங்கதி

எல்லாரும் ஒரு நாள் போய்ச் சேரத்தான் வேண்டும்

பிறகென்ன சௌக்கியமாவது மண்ணாங்கட்டியாவது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...