19 May 2022

சார்! தப்பா நெனைச்சுக்காதீங்க!

சார்! தப்பா நெனைச்சுக்காதீங்க!

            “சாரி சார்! தப்பா நெனைச்சுக்காதீங்க!”

            “சாரிப்பா! நீயென்னை தப்பா நெனைச்சுக்காதே! நான் உன்னை தப்பாத்தான் நெனைக்குறேன்!”

            “சார்! நீங்க என்னைத் தப்பா நெனைச்சுக்க மாட்டீங்கங்ற நம்பிக்கையில சொல்லிட்டேன். நீங்க என்னைத் தப்பாவே நெனைச்சுக்குங்க.”

            “என்னப்பா திடீர்ன்னு இப்படிச் சொல்லிட்டே? உனக்கு ஒண்ணும் குற்ற உணர்ச்சி இல்லையா?”

            “நான் எதுக்கு சார் குற்ற உணர்ச்சி அடையணும்?”

            “நீங்க என்னைத் தப்பா நெனைச்சுக்கலன்னு சொன்னாத்தான் சார் நான் குற்ற உணர்ச்சி அடையணும்.”

            “சாரிப்பா! நான் உன்னை தப்பா நெனைச்சுக்கல.”

பின்குறிப்பும் உரையாடலின் நீதியும் : நீங்கள் யாரைப் பற்றியும் எப்படியும் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் யாரை எப்படி நினைத்துக் கொண்டாலும் அதற்காக யாரும் மாறப் போவதில்லை. எல்லாம் பேச வேண்டும் என்பதற்காகப் பேசுவது. உங்களால் முடியுமானால் ஒரு புன்முறுவல் பூத்துக் கொள்ளுங்கள். அதற்கு எல்லா அர்த்தமும் உண்டு.

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...