22 Oct 2021

முரண்களின் சுழற்சி

முரண்களின் சுழற்சி

இந்த வேளையின் பசி அடங்கிய பிறகு

அடுத்த வேளை பசிக்க தொடங்கும்

இத்தோடு முடித்துக் கொண்டு

இனி இந்தப் பக்கம் வாராதே என்ற

உன் வார்த்தை உண்மையாய் நடந்து கொள்வது எப்படி

பசி துரத்தும் வேளைகளில் எல்லாம்

உன்னைத் தேடி வருவதைத் தவிர வேறு வழியேது

முடிவுக்கு வர மறுக்கும் உலகம்

தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது தெரியாதா உனக்கு

வாக்குறுதிகள் அளிப்பதும் மீறுவதும்

இரவும் பகலும் போல மாறி மாறி நிகழ்வன

காற்றை உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதும்

உயிர்த்தலுக்கான ஏற்பாடுகளாக அமைக்கப்பட்டு விட்டன

நீ நிலையாய் அமர்ந்திருக்கும் வாகனத்தில்

சக்கரங்கள் இயங்குவதைப் போல

ஒன்றுக்கொன்று முரண்பட்டு இயங்குதலின்றி

வார்த்தைகளை மீறாது வாழ்க்கையை இயக்குவதேது

பசி தீர்த்த அன்பினது நன்றிக்கான நொடி மறைந்து

பழி வாங்கும் வன்மத்தினது குரூரம் பிறக்க

பசி தீர்க்க மறுக்கும் உன் அதிகாரமும் காரணமாக இருக்கலாம்

சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்துக்கு மேலேது கீழேது

அன்பும் குரூரமுமாய்ச் சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரம்

*****

No comments:

Post a Comment

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா?

தமிழக வெற்றிக் கழகம் சாதிக்குமா? சோதிக்குமா? தமிழகம் பலவற்றில் முன்னேறி வருகிறது. படித்தவர்களின் எண்ணிக்கை, பணக்காரர்களின் எண்ணிக்கை, தொழி...