1 Aug 2021

ஓடும் சாலைகளும் ஓடாத நீச்சல் குளமும்

வேக வேகமாக ஓடும் சாலைகள்

மெதுவாக நடந்த கால்களுக்கு பூமி புலப்பட்டது

சைக்கிள் சக்கரங்களில் சுழல ஆரம்பித்த போது

மரங்களும் தெருவோரமும் நடந்து வந்தன

இரு சக்கர வாகனம் ஒன்றில் விரைந்த போது

சாலைகள் ஓடி வரத் தொடங்கின

வேகமெடுக்கத் தொடங்கிய ஊர்திகளில்

கடக்க ஆரம்பித்த போது

மங்கலாய் கண்களுக்குள் அசைய ஆரம்பித்தன

பறத்தலின் சாத்தியத்தில் இருந்த போது

கொஞ்சம் கொஞ்சமாய் மறைய ஆரம்பித்தன

வேக சுழற்சி பார்வைக்குப் புலனாகாது

மனிதர்கள் அங்கே இருக்கிறார்கள்

ஒருவருக்கு ஒருவர் புலனாகாமல்

சாலைகள் வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன

*****

நீச்சல் குளம்

இங்கே இருந்த

அம்மாம் பெரிய குளத்தின் மேல் இருக்கிறது

நான்கு பெரும் அடுக்குமாடி கட்டடங்கள்

நடுவில் ஒரு சிறு நீச்சல் குளம்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...