6 May 2021

சொல்வதில் ஏதுமில்லை


மறித்து நிற்றல்

மழை பெய்யட்டும்

புயல் வரட்டும்

வெள்ளம் உண்டாகட்டும்

எனக்கு முன் கணிப்புகளில் விருப்பமில்லை

பெய்யும் மழைக்கு

நடந்து போகப் பாதை வகுத்தோமா

வீசும் புயல்

கடந்து போக நெகிழ்ந்து கொடுத்தோமா

ஓடும் வெள்ளம்

வழிந்தோட தடைகளை எடுத்தோமா

வெறு வழியில்லை

நம் வழியில் குறுக்கிடாது இருக்க

அவைகளின் வழியில்

மறித்து நிற்பதற்கில்லை

*****

சொல்வதில் ஏதுமில்லை

நிச்சயமாகச் சொல்கிறேன்

அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்

அதுவாக வருகிறது

அப்புறம் போகிறது

அதை இறை என்று சொன்னால்

மதவெறியர்கள் ஆவீர்கள்

ஞானம் என்று சொன்னால்

பைத்தியம் பிடித்தவர்கள் ஆவீர்கள்

பிரபஞ்சத்தில் ஒரு பூ ஏன் உதிர்கிறது சருகாகிறது

உங்களால் கண்டுபிடிக்க முடியுமா

ஒரு பூ அதையெல்லாம் யோசித்துக் கொண்டிராது

மலர்கிறது உதிர்கிறது சருகாகிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...