நெடுநாள் நோயாளி ஒரு நாள் வைத்தியன்!
அசரீரியின்
குரல் எங்கும் கேட்கும் போல.
அப்படி
சமீபத்தில் கேட்ட குரல் ஒன்று.
“ஒரு
காலத்தில் ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியனாக இருந்திருக்கிறான்.
பின்னொரு
காலத்தில் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியனாக இருந்திருக்கிறான்.
இப்போதிருக்கும்
காலத்தில் நெடுநாள் நோயாளியாக இருப்பவனெல்லாம் அரை வைத்தியனாக மாறிக் கொண்டிருக்கிறான்.”
***
எல்லாருக்கும்
எல்லாவற்றிருக்கும் ஒரு காரணம் இருக்கிறது.
உதாரணத்துக்கு
ஒன்று.
எதற்காக
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்க்கிறாய்?
இதற்குப்
பதிலில்லை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.
வருமானத்திற்கு
அதிகமாகச் செலவு செய்வதற்காக.
போங்கடா
நீங்களும் உங்கள் பதிலும் என்று சொல்லத் தோன்றுகிறதா? தோன்றினாலும் இந்தப் பதிலை உள்ளூர
ரசிக்கிறீர்கள்தானே?
***
இந்தக்
காரியக்கார உலகில் எப்படியெல்லாம் தப்பித்துக கொள்ள வேண்டியதாகி இருக்கிறது. கழுவுகின்ற
மீனில் நழுவுகின்ற மீனைப் போல என்பார்கள் கிராமத்தில். அயே இப்படியே சொல்லலாம்தானே.
முதலை உன்னை பிடித்து விடும்
போது
நீயும் ஒரு முதலையாகி விட்டால்
தப்பித்து விடலாம்
ஏதோ முதலை எந்நேரமும் நம்மைப்
பிடித்துக் கொண்டுதானே இருக்கிறது. முதலைகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முதலையாகி
விடுவதுதான் வழியோ? சரியான முதலைக்கார உலகம். முதலைகளோடு முதலைகளாகி முதலைகளாகச் சண்டையிட்டுக்
கொள்ள வேண்டியதுதானோ?!
*****
No comments:
Post a Comment