3 Jan 2017

எழுதி எழுதி


விழுந்து புரள்தல்
மண்ணில் விழுந்து புரண்டு
விளையாடிய
மகள் சொன்னாள்
"எங்கேயோ போய்
பெயிண்டுல
விழுந்து புரண்டு
விளையாடிட்டு வருது
வண்ணத்துப் பூச்சிகள்!"
*****

எழுதி எழுதி
பாதச்சுவடுகளை
எழுதி எழுதி
அழித்துக் கொள்கிறது
ஒற்றையடிப் பாதையில்
பெய்யும் மழை.
*****

இருக்கு
களவு போன வீடு
நகரத்தில் இருக்கு.
காணாமல் போன வீடு
கிராமத்தில் இருக்கு.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...