3 Jan 2017

பருக்கள்


பருக்கள்
சொல்லாத வார்த்தைகள்
செல்லத்தின் முகத்தில்
பருக்களாய்!
*****


மழைச் செல்வம்
சில்லரைகளாய்க் கொட்டித் தீர்க்கிறது
மழை.
சீந்துவாரின்றி ஓடிக் கொண்டிருக்கிறது
தண்ணீர்.
*****

பிரிவுகள்
இந்த உலகில்
ஒற்றைச் செருப்புகள்
நிறைய கிடக்கின்றன
உன்னைப் போலவும்
என்னைப் போலவும்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...