2 Jan 2017

பெண் பார்த்தல்


முடிவு
ஆக்சிடென்ட் ஆன அசோக்கின் கார் இன்ஷ்யூரன்ஸ் நேற்றோடு முடிந்திருந்தது.
*****

சத்தியம்
"ஒரு பைசா லஞ்சம் வாங்க மாட்டேன்! இது சத்தியம்!" என்று வைராக்கியமாக அரசுப் பணியில் சேர்ந்த முகுந்தன், வரதட்சணையாக நூறு பவுன் நகையும், பத்து லட்சம் பணமும் கேட்டான்.
*****

லைக்ஸூக்குப் பின்...
பேஸ்புக்கில் பார்த்த அழகான சிலைக்கு லைக்ஸ் போட்டு விட்டு திருடச் சென்றான் சிலை திருடன் சிம்மவிஷ்ணு.
*****

பெண் பார்த்தல்
"இப்ப பொண்ண பார்க்கப் போறோம்டா!" என்று மாஸ் இன்ட்ரோ கொடுத்து விட்டு, வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணினாள் அம்மா.
*****

காதல் மன்னன்
தன் காதலுக்கு கர்ணனிடம் உதவி கேட்ட உத்தமன் கெஞ்சினான், "அவ பேஸ்புக் பாஸ்வேர்டை மட்டும் ஹேக் பண்ணிக் கொடு!"
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...