3 Jan 2017

சில நேரங்களில் சில விதிகள்


செல்பி
தியேட்டர்ல எடுத்த செல்பியை பேஸ்புக்ல போட்டு இருக்கக் கூடாது என்று பல்லை கடித்துக் கொண்டான், கட் அடித்து விட்டு படம் பார்த்துக் கொண்டிருந்த கணேசமூர்த்தி.
*****

ரிலீஸ்
"சென்சார் ஆகாதுன்னு நினைக்கிறேன்!" என்று டைரக்டர் சொன்னதும், "யூடியூப்லேயே ரிலீஸ் பண்ணிடுங்க!" என்றார் தயாரிப்பாளர்.
*****

வெளிநடப்பு
சபையில் வெளிநடப்பு செய்தவரிடம் சொல்லப்பட்டது, அவர் மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்று விட்ட செய்தி.
*****

சில நேரங்களில் சில விதிகள்
"ம்! க்யூக்!" என்றதும் இன்ஸ்பெக்டர், ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டர் மூவரும் ஏற ஸ்டார்ட் ஆனது டூவீலர்.
*****

முடிவு
நான்கு வருடங்கள் வாய்தாக்களால் இழுத்தடித்தப் பிறகு, வேகமாக ஒரு முடிவுக்கு வந்தனர் கட்சிக்காரர்கள் இருவரும்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...