3 Jan 2017

முத்தத்து முறைகள்


தொடாத விரல்கள்
தொடுவது போல
தொடும்
தொடுவானிற்கு
விரல்கள் எது...?
உன் பார்வையைப் போல!
*****

முத்தத்து முறைகள்
"ஒரு முறை
ஒரே ஒரு முறை"
ஆயிரம் கெஞ்சலுக்கு
அப்புறம் கிடைக்கும்
முதல் முத்தம்!
கொஞ்சுதலுக்கு எல்லாம்
கிடைத்து விடும்
முதல் முத்தத்திற்குப்
பிறகான
அடுத்தடுத்த முத்தங்கள்!!
*****

நீடிப்பு
நிறுத்த முடியாத
ஒரு குழந்தையின்
அழுகையைப் போல
நீடித்துக் கொண்டிருக்கிறது
ஊடல் கொண்ட
ஒரு காதலின்
செல்பேசி அழைப்பு!
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...