4 Jan 2017

பெயர் மாற்றம்


ஏமாற்றம்
உறுமீன் வரை
காத்திருக்குமாம்
காவிரி நீர் வராத
வாய்க்காலில்
கொக்கு!
*****

இருப்பு
ஒரு
பொதுக்கழிவறை
என்பது
பொதுவாக
கழிவு நிறைந்த அறை!
*****

பெயர் மாற்றம்
பெயர் மாறி விடும்
தாயாகும் போது
அம்முக்குட்டி அம்மா என்று!
*****

சொல்
கோபம்
அழித்து விட்ட
அன்பையும் நட்பையும்
கடைசியில்
பழிச்சொல்லாகப் போடுகிறோம்
அவன் மட்டும் கொஞ்சம்
விட்டுக் கொடுத்திருந்தால்...
என்று
அவன் விட்டுக் கொடுத்த போதெல்லாம்
கோபம் கொண்டு
அதை
மறுத்த நாம்!
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...