2 Jan 2017

ரயில் காதல்கள்


ரயில் காதல்கள்
ரயிலில் அடிபட்டுச் சாகிறது
சாதியை மீறிய
காதல்.

பாதுகாப்பான
ரயில் பயணங்கள்
ஒரு போதும்
சாத்தியப்படுத்தியதில்லை
தண்டவாளங்களில்
நிகழும்
காதல் தற்கொலைகளை.

ஏற்றிக் கொன்றவர்கள்
ஏராளமாய் இருக்கட்டும்
என்பதற்காகவே
காதலர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்
ரயிலை.

எல்லா ரயில்களிலும்
எங்கோ ஒரு மூலையில்
ஒட்டி இருக்கிறது
மரணித்த காதலின்
ரத்தம்.

லாரியை ஏற்றிக் கொல்வார்கள்
நேர்மையை.
ரயிலை ஏற்றிக் கொல்வார்கள்
காதலை.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...