6 Jan 2017

கடவுள் காப்பாற்றுவார்


வருத்தம்
கூட்டுறவு சங்கக் கடன் தள்ளுபடி செய்தி கேட்டதும் முதன் முறையாக விவசாயம் செய்யாததற்காகக் கவலைப்பட்டார் பெரியப்பா.
*****

வாங்கல்
தரிசாகப் போட்ட நிலத்திற்கும் வருடந்தோறும் வறட்சி நிவாரணமோ, வெள்ள நிவாரணமோ முண்டியடித்து முதலில் வாங்கி விடுகிறார் மேலத்தெரு சித்தப்பா.
*****

நியதி
வில்லன் ஆடை பற்றி இழுக்க வெகுண்ட நாயகி, நாயகனோடு அரை குறை ஆடையில் ஆடிக் கொண்டிருந்தாள்.
*****

2116
மழையில் நனைவதற்கு காசு வாங்கிக் கொண்டு குடையை இலவசமாக விநியோகித்தது கே.பி.ஆர்.எல். நிறுவனம்.
*****

கடவுள் காப்பாற்றுவார்
கோயில் வாசலில் பிச்சையும் எடுக்கலாம். செருப்பையும் திருடலாம்.
*****

1 comment:

  1. எதார்த்தம் ரசனை சிந்தனை நையாண்டி என அனைத்தும் சேர்ந்த கலவையாக அருமை சார்

    ReplyDelete

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...