ஒலி
குருவிகள்
வைத்ததைத் தின்று விட்டுப்
பறந்து விடுகின்றன.
காக்கைகள்தான்
அரை வயிற்றுக்கு வைத்ததை
கூவி அழைத்து உண்கின்றன.
*****
வளரும் மீன்கள்
மணலற்ற ஆற்று வழி
கட்லாக்களும்
கெண்டைகளும்
வளர்கின்றன,
முன்னொரு காலத்தில்
ஆறாக இருந்து
பின்னொரு காலத்தில்
சாக்கடையாக
தேங்கி நிற்கும்
அந்தக் கருப்பு நதியில்!
*****
தொடர்ந்து ஒலிக்கும் குரல்கள்
என் அன்பானவனின்
பிணத்தருகே
நின்று கொண்டிருப்பது
அவனுக்குத் தெரியாது.
நான் நகர்ந்தால்
நரிகள் தூக்கிச் செல்லலாம்.
கழுகுகள்
அன்பான இதயத்தின் சதையினை
கிழித்துச் செல்லலாம்.
அவன் பிணத்தைக்
காத்து கொண்டிருக்கும்
எனக்குத் தெரியவில்லை
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும்
அவன் செல்போனை
என்ன செய்வதென்று?
*****
This comment has been removed by the author.
ReplyDelete