4 Jan 2017

வார்த்தைகள்


வார்த்தைகள்
அரசாங்கப் பள்ளியின்
யூனிபார்மோடு
பள்ளிக்குச் செல்லும்
அந்தச் சிறுமியைப் பார்க்கையில்
"ஏ பொட்டக் குட்டி!"
என்ற வார்த்தையும்
கட் ஷூ
பெல்ட்
டை
சகிதம்
மடிப்பு கலையாத
யூனிபார்மோடு
வேன் ஏறிச் செல்லும்
அந்தச் சிறுமியைப் பார்க்கையில்
"க்யூட் கேர்ள்!"
என்ற வார்த்தையும்
கைவசம் எப்போதும் உண்டு
எல்லாரிடமும்!
*****

வருகை
ஆயிரக்கணக்கான
கிருமிகள்
எங்கிருந்து வந்தன?
எங்கிருந்தோ
எப்படியோ
ஏனோ வந்தன
ஒரு ஹேண்ட் வாஷ் திரவத்தை
வாங்க வைக்க!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...