4 Jan 2017

காட்சிகள்


காட்சிகள்
மூடிக் கிடக்கும் திரையரங்கம்
எண்ணற்ற காட்சிகளை
ஓட்டிக் கொண்டிருக்கிறது
மனதுக்குள்ளும்
நினைவுக்குள்ளும்!
*****

அதிசயம்
நடப்பதெல்லாம்
அதிசயம் என்பது
புரியாதவர்கள்
எப்போதும் எதிர்பார்த்த வண்ணம்
இருக்கிறார்கள்
ஏதாவது
ஒரு அதிசயம்
நிகழட்டும் என!
*****

முடிவு
பெருமழை நின்ற பின்
பெய்து முடித்திருந்தது
காமம்!
*****

கேட்டல்
காது கேளாத
கந்தசாமி மாமாவுக்கு
எப்படியும்
கேட்டு விடும்
அவர் பெயர் சொல்லி
அழைக்கும்
குரல்கள் மட்டும்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...