4 Jan 2017

மற்றொரு நாள்


பார்த்தல்
கண் தெரியாது
என்கிறார்கள்
அந்தச் சிறுமிக்கு!
பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறாள்
அவள்
அன்பின் ஸ்பரிசங்களை!
*****

பதில்
அவரவர் மனநிலைக்கு
ஏற்ற மாதிரியான
பதிலைத் தேடியபடி
சில நிமிடம்
மெளனமாக இருந்த
நண்பனிடம்
"உண்மையைச் சொல்!" என்றோம்.
"என்ன நடக்கிறது என்று
தெரிகிறது
ஆனால்
உங்களுக்கு
எப்படிச் சொல்வது
என்றுதான் தெரியவில்லை!"
என்றான்
மீண்டும் நாசுக்காக!
*****

மற்றொரு நாள்
நாள்தோறும்
அழுக்கு வேட்டியைத் தவிர
வேறு எதையும் கட்டியிராதவர்
காலில் செருப்பென எதையும்
போட்டிராதவர்
மேலுக்குச் சட்டையென
எதையும் அணிந்திராதவர்
அன்றொரு நாள்
டிப் டாப்பாக
நின்று கொண்டிருந்தார்
குழாய்ச் சட்டையோடும்
மேல் சட்டையோடும்
கதவு திறந்து விடும் காவலாளியாக!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...