5 Jan 2017

கட்டுக் கட்டாகப் பணம்


கட்டுக் கட்டாகப் பணம்
            சமத்து சம்புலிங்கம் அந்த ஏரியாவின் பெரிய பிக்பாக்கெட் பேர்வழி. எப்படிப்பட்ட ஆளிடமும் சோக்காய் பாக்கெட் போட்டு விடுவார்.
            மக்கள் ஏ.டி.எம்.கார்டுக்கு மாறிய போதும் ஏ.டி.எம். கார்டைத் திருடி அதிலும் ஆட்டையைப் போட்ட பெருமை சம்புலிங்கத்துக்கு உண்டு.
            சமீப காலமாக சம்புலிங்கத்தின் நிலைமை கவலைக்கிடமாகப் போய் விட்டது.
            பணநீக்க மதிப்பால் மக்கள் வெறும் பாக்கெட்டோடு திரிந்ததால் சம்புலிங்கம் போடும் பாக்கெட்டுகளில் எல்லாம் வெறும் காற்றுதான் வந்தது. பணம் வரவில்லை.
            வெறுத்துப் போன சம்புலிங்கத்தை நோக்கி வந்த சக பிக்பாக்கெட் சோதிலிங்கம்,     
            " இப்போல்லாம் பெரிய பெரிய பணக்காரங்க வீட்டுலதாம் கட்டு கட்டா பணம் சிக்குதுப்பா!" என்றார்.
            "இப்படியெல்லாம் பண்ணா நம்மள மாதிரி பிக்பாக்கெட்டுங்க எல்லாம் எப்படி பொழைக்கிறது?" என்றான் விரக்தியாக சம்புலிங்கம்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...