5 Jan 2017

இது இந்த மாசம்!


இது இந்த மாசம்!
            சமத்து சம்புலிங்கம் விரைவாகப் போனால் வங்கியில் பணம் இருப்பதில்லை. சற்று தாமதாகச் சென்றால் அதற்குள் அன்று வந்த பணத்தை இருப்பவர்களுக்குக் கொடுத்து முடித்து விடுகிறார்கள்.
            ஏ.டி.எம்.மிலும் இதே பிரச்சனைதான்.
            எத்தனை நாள்தான் அலைவார் சமத்து சம்புலிங்கம்?
            கோபம் கொப்புளிக்க வங்கிக்குள் நுழைந்தார்.
            "போன மாசமே ஏ.டி.எம். பிரச்சனையெல்லாம் சரியாகிடும்னு சொன்னீங்களே!" என்றார் பேங்க் மேனேஜரை நோக்கி ஆவேசமாக சம்புலிங்கம்.
            "அது போன மாசம்! இது இந்த மாசம்!" பொறுமையாக சம்புலிங்கத்துக்குப் புரியும் படி எடுத்துச் சொன்னார் பேங்க் மேனேஜர்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...