5 Jan 2017

செய்தல் குறித்த குறிப்புகள்


செய்தல் குறித்த குறிப்புகள்
ஏதேனும் செய்தால் நன்றாக இருக்கும்
செய்வதற்கு ஏராளமாக இருக்கின்றன
எதைச் செய்வது என்ற குழப்பமும்
மனதிற்குள் இருக்கின்றது
ஒன்றைத் தேர்ந்தெடுத்துச் செய்வதற்குள்
அதைப் பற்றி வரும்
எதிர்கருத்து
அதைச் செய்ய விடாமல் தடுக்கிறது
வாழ்க்கையில்
எதாவது செய்ததென்றுப் பார்த்தால்
அதுவாக தன்னை
என்னைக் கொண்டு செய்திருப்பதாகத் தெரிகிறது
நான் செய்வதற்கு எதுமில்லை
என்று தெரிந்தும்
எதையும் செய்யாமல்
இருக்க முடியவில்லை.
*****

பொழுதுகள்
ந்தக் குளிரான
மழைக்காலப் பொழுதில்
அவர் வேண்டும்
என
நினைத்த போது
அவர் யாருடனோ
செய்து கொண்டிருந்தார்
சாட்டிங்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...