5 Jan 2017

பிணமொரு பயணம்


மேலும் மேலும்
கிருமிகள் என்று
தெரிந்தும்
அழிக்க மனம் வரவில்லை!
அழிக்க அழிக்க
புறப்பட்டு வரலாம்
மேலும் மேலும்
சக்தி வாய்ந்த
ஆன்டிபயாடிக்குகள்!
*****

நட்ட பின்...
என்னை பிடுங்கி
என்னை நட்டபின்
நான்
புதிதாய் முளைத்திருப்பதாக
சொன்னாய்,
"யார் நீ?" என்ற
ஆச்சர்யம் விலகாத
என் கேள்விக்கு
நீ சொன்ன பதில்
"நெடுஞ்சாலை!"
*****

பிணமொரு பயணம்
பயணத்தின் முடிவில்தான்
தெரிய வந்தது
பக்கத்தே
அமர்ந்திருந்தவர்
ஒரு பிணமென!
அமரர் ஊர்தி ஒன்றின்
செலவைச் சிக்கனப்படுத்தி விட்ட
திருப்தி
பிணத்தோடு
பேருந்து ஏறியவர்களின்
முகத்தில் தெரிந்தது.
நானும்
ஈமச் சடங்கில்
கலந்து கொண்ட திருப்தியோடு
வீட்டிற்கு வந்து
குளித்துக் கொண்டேன்!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...