5 Jan 2017

வைரல்


வைரல்
தடை செய்யப்பட்ட படம் இணையத்தில் வைரலாகப் பரவிக் கொண்டிருந்தது.
*****

அடி
"பன்னெண்டு மணிக்கு முன்னாடி எழுப்புனா அடிப்பாருடி!" என்றான் கற்பகம் உறங்கிக் கொண்டிருக்கும் தன் டாஸ்மாக் கணவனைச் சுட்டிக் காட்டி.
*****

மாற்றம்
இன்ஜினியரிங் காலேஜை நர்சரி & பிரைமரி பள்ளியாக மாற்றினார் வணங்காமுடி.
*****

விடுவிப்பு
பட்டப்பகல். நடுரோடு. டிராபிக். ஆளை வெட்டிய ரெளடி விடுவிக்கப்பட்டான் போதிய ஆதாரங்கள் இல்லையென்று.
*****

பிடிச்சிருக்கு
"பிரேக் அப் ஆயிடுச்சு! நீங்க பார்த்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்!" என்றான் இரண்டு நாள்களுக்கு முன் பார்த்த பெண் பிடிக்கவில்லை என்று சொன்ன மதன்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...