4 Jan 2017

நனைத்து விட்டுச் செல்லும் மழை


விடைகள்
நான்கு விடைகள்
இருந்த போதும்
எது விடை என்று
தெரியாத போது,
தெரிந்தது,
நான்கும்
தவறான விடைகள்!
*****

கைகளில் செல்லும் உயிர்
கடைகளில்
தூக்கில் தொங்கும்
ஒவ்வொரு பொம்மையின்
உயிரும்
குழந்தைகளின் கைகளில்
இருக்கிறது!
*****

கவிதையின் கண்கள்
ஒரு கவிதையின்
கண்களோடு
இரண்டு பக்கமும்
மாறி மாறி
பார்த்துக் கொண்டு இருக்கிறது
மதில் மேல் அமர்ந்திருக்கும் பூனை!
*****

நனைத்து விட்டுச் செல்லும் மழை
நனைத்து விட்டுதான் செல்வேன்
என்று
அடம் பிடிக்கும் மழை
குடை எடுத்துச் செல்லாத
நாளில்
வந்து விடும்
தவறாமல்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...