5 Jan 2017

கண் திருஷ்டி


ஸ்டிக்
வாக்கிங் ஸ்டிக் வாங்க வேண்டிய காலத்தில் செல்பி ஸ்டிக் வாங்கிக் கொண்டார் தாத்தா.
*****

கண் திருஷ்டி
கண் திருஷ்டி விநாயகர் சிலை காணாமல் போனது, சிலை திருட்டுக் கும்பலின் கண் பட்டதும்.
*****

பரிவு
"இட்டிக் கடையை அடிச்சுக் காலி பண்ணிடுவேன் பார்த்துக்கோ!" என்ற கபாலி எதுவும் செய்ய முடியாமல் பின்வாங்கி நடக்க, பரிவுடன் கூப்பிட்டு நாஷ்டா கொடுத்தாள் இட்லிக்காரப் பாட்டி.
*****

மாறுதல்
கடைசியில் மாறுதல் மறுக்கப்பட்டது அவன் ஒரு நல்ல பணியாளன் என்பதைக் காரணம் காட்டி.
*****

அபூர்வம்
அமெரிக்க மாப்பிள்ளையை மறுத்து, சென்னையில் வேலை செய்யும் மாப்பிள்ளையை டிக் செய்தாள் அமெரிக்க ரிட்டர்ன் அபூர்வா.
*****

1 comment:

  1. 10 செகண்ட் கதைகள் பளிச்

    ReplyDelete

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...