5 Jan 2017

கவனம்


கவனம்
பத்தாண்டு கால
அறைப் பரிட்சயத்தில்
எத்தனையோ முறை
போட்டிருப்பேன்
நிறுத்தியிருப்பேன்
மின்விசிறிக்கான ஸ்விட்சை!
ஒரு நாளும்
கவனத்தில் கொள்ளப்படாத
அது
மின்விசிறி ஓடாத
ஒரு நாளில்
கவனம் பெறத் தொடங்கியது.
மீண்டும் மீண்டும்
போட்டும் நிறுத்தியும்
பார்த்து
இனம் புரியாத வெறுப்பில்
இன்னொரு ஸ்விட்ச்
மாற்றப்பட,
இன்னுமொரு
பத்து ஆண்டுகளுக்கு
கவனம் பெறாத ஸ்விட்சாக
அது
என்னறையில்
இருக்கக் கடவதாக!
*****

குறுங்காதல்
நாம் பேசாத
பல நாள்களுக்கு
ஒரு தூதுவனைப் போல்
வந்தது
அந்த குறுஞ்செய்தி!
அதை அழிப்பதா
அதற்கொரு பதில் அளிப்பதா
என்ற
சஞ்சலத்திலே
சில நாள்கள் கழிந்தன.
மீண்டும் மீண்டும்
உன் குறுஞ்செய்திகள்
வந்து கொண்டிருக்கின்றன.
பேச மறுக்கும்
உன் பிடிவாதமும்
பதில் குறுஞ்செய்தி அனுப்ப யோசிக்கும்
என் பிடிவாததும்
எதுவும் செய்ய விடாது
பிரித்து வைக்கின்றன நம்மை!
*****

2 comments:

  1. கவனம் எதார்த்த கவிதை சார்

    ReplyDelete
  2. குறுங்காதலில் வலி நீளம்
    நெகிழ்ச்சி

    ReplyDelete

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...